இன்று வித்தியா கொலையில் முக்கிய சாட்சியம்!
Monday, July 24th, 2017
கூட்டுப்பாலியல் செய்து படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று நடைபெறவுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது குறித்த வழக்கினை நீதிவான் நீதிமன்றில் பல மாதங்களாக விசாரணை செய்த ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் இன்றைய தினம் காலை சாட்சியம் அளிக்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணை அதிகாரியான குற்ற புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவும் சாட்சியம் அளிக்கவுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
Related posts:
யார் எதிர்த்தாலும் சைட்டம் மருத்துவக் கல்லூரி மூடப்படாது – டாக்டர் நெவில்!
பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அரசாங்கமே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என ப...
|
|
|


