நல்லூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது!
Sunday, July 23rd, 2017
யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுமாலை நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் படுகாயமடைந்தனர். இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து யாழ் நகரப்பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் விசேட அதிரடிப்படையினரால் தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபா்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இது குறித்து யாழ்.மாவட்ட பொலிஸார் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்து.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106