விஷேட வேகப் பந்து வீச்சு பயிற்சியாளராகிறார் வாஸ்!
Saturday, July 22nd, 2017
இலங்கை வந்துள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கையின் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் விஷேட வேகப் பந்து வீச்சு பயிற்சியாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடர் வரும் 26ம் திகதி ஆரம்பமாகின்றது.
இந்தத் தொடரில் முதல் போட்டியாக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு ரங்கன ஹேரத் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன் 100 மீட்டர் ஒட்டப் போட்டியில் வெற்றி!
மகன் தங்கம் வெல்வதற்காக காய்கறி விற்று நிதி கொடுத்து ஊக்கமளித்த ஏழைத் தாய்!
கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா - விளையாட்டுத்துறை அமைச்சர் ஐசிசிக்கு அவசர கடிதம்!
|
|
|


