இருபதுக்கு 20 உலகக்கிண்ணம்: சூப்பர் 12 சுற்று இன்று ஆரம்பம்!
Saturday, October 23rd, 2021
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று (23) ஆரம்பமாகின்றன.
அதற்கமைய சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று பிற்பகல் மோதவுள்ளன.
அதேபோல இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதவுள்ளன.
இந்த சுற்றில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி நாளையதினம் சார்ஜாவில் நடைபெறவுள்ளதுடன் இதில் பங்களாதேஷ் அணியை இலங்கை எதிர்த்தாட உள்ளது.
சூப்பர் 12 போட்டிகளில் குழு 1 மற்றும் குழு 2 என்ற அடிப்படையில் குழுக்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய குழு 1 இல், இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குழு 2 இல், இந்தியா, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து, நமீபியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாம் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
அதற்கமைய முதலாம் சுற்றின் குழு (ஏ) இலிருந்து இலங்கை மற்றும் நமீபியா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.
அதேபோல குழு (பி)இலிருந்து ஸ்கொட்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106