வறிய மக்களின் வாழ்வியல் விடிவுக்காக நாம் அயராது பாடுபடுவோம்- வி.கே.ஜெகன்

Friday, July 21st, 2017

எமது கட்சி அடக்கு முறைகளையோ அதிகார துஷ்பிரயோகங்களையோ ஒருபோதும் மேற்கொண்டது கிடையாது. வறிய மக்களது வாழ்வியல் மேம்பாடுகள் அவர்களது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பானவற்றை முன்னிறுத்தியே எமது கட்சியின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளர்.

வேலணை பிரதேசத்தின் வட்டார பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்றையதினம் வேலணை முருகமூர்த்தி பொதுமண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –

தீவகப் பிரதேசமானது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் வளர்ச்சியுடன் அதிகளவு பங்களிப்பை செலுத்திவரும் ஒரு பகுதியாகும். இப்பகுதியில் வாழும் மாக்களின் அபிவிருத்தி மற்றும் பிரதேசத்தின் மேம்பாடுகள் தொடர்பில் மேலும் அதிகரித்த பங்களிப்பை செய்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் இங்கு அமைக்கப்பட்டுள்ளதால் எமது கட்சியின் செயற்பாடுகள் அடிமட்ட கிராமங்கள் வரை சிறபாக சென்றடைந்துள்ளது.

இது இப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். இத்தகைய கட்டமைப்பை முழுமையாக வெற்றிகொள்ள செய்ய எமது கரங்கள் காத்திருக்கின்றன. அதற்கான அதிகரித்த பலத்தை எமக்கு பெற்று தருவது இப்பிரதேச மக்களாகிய உங்களது கரங்களிலேயே தங்கியுள்ளது என்றார்.

இதன்போது கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் யசோ மற்றும் பிரதீபன் ஆகியோர் உடனிருந்தனர்

Related posts:

முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக கட்டமைக்கப்பட்டுள்ளது ஈ.பி.டி.பி - ஈ.பி.டி.பியின் யாழ்.மா...
மனுஸ் தீவில் உயிரிழந்த  அமரர் ரஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை...
பிரதேச மக்களுக்ளின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்வப்படுவது அவசியம் - வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் ...

வேலணை பிரதேசத்தில் உள்ள கலைஞர்களின் நலன்கள் உறுதிசெய்யப்பட வேண்டும் - தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!
ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதனின் சேவை மறக்கமுடியாததொன்று - உதவிக்கல்விப்பணிப்பாள...
மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று நடவடிக்கை வேண்டும் – ஈ....