ட்ரம்ப்- புட்டின் சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளது வெள்ளை மாளிகை!

Friday, July 21st, 2017

ஜேர்மனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றது என்பதை வெள்ளைமாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இருநாட்டு தலைவர்களும் ஜி-20 மாநாட்டின் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் சாதாரணமாக பேசிக் கொண்டதாகவும் இதனை இரண்டாவது சந்திப்பாக கருத முடியாது என்றும் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்த அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் இருவரும் கடந்த 7 ஆம் திகதி சுமார் 2 மணிநேரம் தனியாக சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகியிருந்தன.இந்நிலையில் புட்டினும், ட்ரம்பும் மீண்டும் ஒருமுறை இரகசிய சந்திப்பை நடத்தியதாகவும் இதன்போது விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106