ரங்கன ஹேரத்துடன் முன்னணி பந்துவீச்சாளர்கள்!
Friday, July 21st, 2017
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள டெஸட் போட்டியில் சர்வதேச கிரிக்கட் சம்மேளன தரப்படுத்தலில் முதல் மூன்று இடங்களில் உள்ள பந்துவீச்சாளர்கள் விளையாடவுள்ளமை சிறப்பம்சமாகும்.
சுற்றுலா சிம்பாப்வே அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சு திறமையின் படி அவர் சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சு தரப்படுத்தலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டார்.
அந்த போட்டியில் ரங்கன ஹேரத் 11 விக்கட்டுக்களை வீழ்த்தி தொடராட்ட நாயகன் விருதையும் பெற்றிருந்தார்.இந்த தரப்படுத்தலில் முதலிடத்தை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் மூன்றாவது இடத்தை ரவிச்சந்திரன் அஷ்வின் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை வந்துள்ள இந்தியா அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.இரண்டாவது போட்டி ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் மூன்றாவது போட்டி ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் ஆரம்பமாகவுள்ளது.இந்திய அணி இறுதியாக 2015ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.அப்போது, இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இரு நாடுகளுக்கும் இடையில் நாளை கொழும்பு சி.சி.சி மைதானத்தில் இரண்டு நாள் பயற்சி போட்டியொன்று இடம்பெறவுள்ளது.இந்த சுற்றுத் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் , மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் , 5 ஓருநாள் போட்டிகளிலும் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106