‘ஒபாமாகெயார்’ இரத்தாகும்’ – ட்ரம்ப் !
Thursday, July 20th, 2017
ஒபாமாகெயார் மருத்துவத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு குடியரசு கட்சியின் புதிய சுகாதார பராமரிப்பு சட்டமூலம் உருவாக்கப்படுவது உறுதி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவால்விடுத்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘ஒபாமாகெயார்’ காப்பீட்டு திட்டத்தை இரத்து செய்யும் முயற்சி மீண்டும் தோல்வி அடைந்த நிலையில் அது தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தனக்கு பின்னடைவை ஏற்படுத்திய ‘ஒபாமாகெயார்’ காப்பீட்டு திட்டத்தை இரத்து செய்யும் முயற்சி தோல்வியடைந்தமைக்கு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் தனது சொந்த கட்சியின் சில உறுப்பினர்களையும் கடுமையாக சாடியுமுள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஜனநாயகக் கட்சியினராலும் ”சில குடியரசு கட்சி உறுப்பினர்களாலும் நாம் கைவிடப்பட்டுள்ளோம்.ஆனால் பெரும்பாலான குடியரசுக் கட்சியினர் விசுவாசமாக செயற்படும் அதேவேளை கடுமையாக உழைத்தும் வருகின்றனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகாது. நாம் வெல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் தனது கனவு திட்டமாக ‘ஒபாமா கெயார்’ என்ற மலிவு கட்டண காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார்.
ஆனால் குறித்த காப்பீட்டு திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த ட்ரம்ப் ‘ஒபாமா கெயார்’ திட்டத்தை ஒழித்துக்கட்டிவிட்டு புதிய சுகாதார பராமரிப்பு சட்டமூலத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் அது தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106