இளைஞர் யுவதிகளில்  40 சதவீதமானோர்  தேர்தல்களில் வாக்களிப்பதில்லை!

Wednesday, July 19th, 2017

நாட்டில் 40 சதவீதமான இளைஞர் யுவதிகள் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை என ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற ஐவொய்ஸ் டொட் எல்கே என்ற சமூக ஊடக வலைதளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பிரதியமைச்ர்  இதனைத் தெரிவித்தார்.

சிறந்த இளைஞர் சந்ததியை உருவாக்குவதற்காக சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதியமைச்சர் அங்கு சுட்டிக்காட்டினார்.

நாட்டின் இளைஞர் யுவதிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு பிரச்சினைகள் விடயத்தில் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதில் அந்தளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை நாட்டில் 40 சதவீதமான இளைஞர் யுவதிகள் வாக்களிப்பதில்லை என ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு உகந்த விடயமல்ல. இவர்கள் பிரதான ஊடகங்களையும் விட சமூக ஊடகங்களில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இளைஞர் யுவதிகளை சிறந்த குணநலன் மிக்கவர்களாக உருவாக்குவதற்கு சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்தார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106