கிழக்கின் பொன் அணிகளின் சமர்: திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி வெற்றி!
Sunday, May 15th, 2016
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கும் இடையிலான 23வது பொன் அணிகளின் சமர் கிரிக்கட் சுற்றுப்போட்டி இம்முறை திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில், முதலில் துடுப்பாடிய திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணியினர் 128 ஓட்டங்களைப் பெற்றனர்.
எனினும் பதிலுக்கு துடுப்பாடிய மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய அணியினர் 117ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இந்நிலையில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது..
போட்டியின் சிறப்பாட்டக்காரராக திருகோணமலை. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியை சேர்ந்த பே.பானுசாந் தெரிவாகியதுடன்,
சிறந்த துடுப்பாட்ட வீரராக மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தை சேர்ந்தத.தர்மிகனும், சிறந்த பந்துவீச்சாளராக திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி சேர்ந்த வே.தக்சனனும், சிறந்த களத்தடுப்பாளராக திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியை சேர்ந்த ம.அஜந்தான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106