மதுபானநிலையங்களுக்கான அனுமதிப் பத்திரங்களைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளது!
Tuesday, July 18th, 2017
மதுபானநிலையங்களுக்கான அனுமதிப் பத்திரங்களைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு தாம் நிதி அமைச்சிடம் கோரி இருப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார் போதை பாவனையை தடுப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் பல்வேறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.இந்த அறிவுறுத்தல்களை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டு மக்கள் 648 வகையான போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக ஜனாதிபதி போதைப் பொருள் தடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது
அதன் பணிப்பாளர் வைத்திய சமந்த கிதலவ ஆராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.அதேநேரம் நாட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கையில் 35 சதவீதமானவர்கள் மதுபழக்கம் உடையவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106