அமெரிக்கா – பனாமா வெற்றி!
Tuesday, July 18th, 2017
கொன்ககாப் தங்கக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில், இலங்கை நேரப்படி நடைபெற்ற போட்டிகளில், ஐக்கிய அமெரிக்கா, பனாமா ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.
பனாமா அணிக்கும் மார்ட்டினிக் அணிக்கும் இடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில், பனாமா அணி வெற்றிபெற்றது.
ஐ.அமெரிக்காவுக்கும் நிக்கராகுவா அணிக்கும் இடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில், ஐ.அமெரிக்கா வெற்றிபெற்றது.
இதன்படி, போட்டிகளை நடத்தும் நாடான ஐ.அமெரிக்கா, குழு பி-இல் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. அத்தோடு, காலிறுதிப் போட்டிகளுக்கு, பனாமா அணியும் தகுதிபெற்றது. இக்குழுவில் 3ஆவது இடத்திலுள்ள மார்ட்டினிக் அணி, ஏனைய குழுக்களின் 3ஆவது நிலை அணிகளைப் பொறுத்தே, காலிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும்.
Related posts:
எங்களுக்கும் அனுசரணை வேண்டும் - ஆதிவாசிகளின் கிரிக்கட் அணி
தடளகட வீரர் பிஸ்டோரியஸிற்கு மாரடைப்பு?
முத்தையா முரளிதரனின் தந்தையின் ஏழ்மை - இந்திய ஊடகம் புகழாரம்!
|
|
|


