விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீரர் சாம்பியன்
Monday, July 17th, 2017
விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 11-ம் தேதி தொடங்கின. இப்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (16-ம் தேதி) நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்துவும் முதல்நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ரெக்ஸ் ஹெட்ரிக்ஸ்சும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டில் ஆஸ்திரேலிய வீரர் 14-12 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன்பின் சுதாரித்து கொண்டு விளையாடிய ஹரிந்தர் இரண்டாவது செட்டை 11-3 என்ற புள்ளி கணக்கில் எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஹரிந்தர் அடுத்த இரண்டு செட்டுகளையும் வென்றார்.
இதன்மூலம் 12-14, 11-3, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் வென்ற ஹரிந்தர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த ஆண்டு ஹரிந்தர் வெல்லும் நான்காவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தெற்கு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106