யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கண்காட்சி

Tuesday, July 11th, 2017

“எனது கனவுகள்,; எனது திறன்கள், எனது பயணம்” தேசிய ரீதியில் பயணம் செய்யும் ஒரு புகைப்படக்கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை (11.) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சி கூடத்தினை  கனேடிய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய ஷெல்லி வைற்றிங் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்

கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தினால் பொருளாதார நிலை மாற்றத்திற்கான விசேட திறன்களை மேம்படுத்தல் எனும் கருத்திட்டத்தின் கீழ் நிலையான வேலைவாய்பபினை பெற்றுக்கொள்வதற்காக கடந்து வந்த விடயங்கள், தொழிலுக்கான திறன்கள் தொடர்பான “எனது கனவுகள், எனது திறன்கள், எனது பயணம்” எனும் தொனிப்பொருளில் இக்கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியானது, காலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை நடைபெற்றது. உலக பல்கலைக்கழக சேவை நிறவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் யூடி தீபன் மற்றும் அதிகாரிகள் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உட்பட உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தில் கற்கும் மாணவ மாணவிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106