காலம் கடந்து ஞானம் பிறந்தது கஜேந்திரகுமாருக்கு!

Monday, July 10th, 2017

1987 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே நாட்டை எவ்வித அழிவுகளும் இல்லாமல் பாதுகாத்திருக்கலாம். ஏனெனில் அப்போதே 13ஆம் திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டது. குறித்த முறைமையை அப்போதிருந்த தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப் மட்டும் ஏற்றுக்கொண்டு வடக்கு கிழக்கு இணைந்த தேர்தலில் போட்டியிட்டது.

இதற்கு அவர்கள் தெரிவித்த காரணம் இந்தியாவை கொண்டு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும். ஆனால் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளோம். இன்று புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒற்றையாட்சி என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அன்று ஒற்றையாட்சியின் கீழான தீர்வை ஏற்றுக்கொள்ளாத எம்மை கொண்டே இன்று எமது தலைவர்களால் தீர்வு திணிக்கப்படுகின்றது. எமக்கு துரோகம் செய்வது சிங்கள அரசு அல்ல. எமது தலைமைகளே துரோகம் செய்கின்றது என்றார்.

இவ்வாறு உருவாக்கப்படும் எல்லா அரசியலமைப்புக்களிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிட்டுள்ள விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் சிங்கள மொழியில் உள்ளதே ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்வாறு இரு மொழிகளிலும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒற்றையாட்சி என்ற பதம் சிங்கள மொழியில் உள்ளமையால் அதுவே அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

வைத்தியர் நா.பன்னீர் செல்வம் எழுதிய இணண்டு புத்தகங்கள் அண்மையில் வெளியீடு செய்யப்பட்டன. குறித்த நிகழ்வு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் நூலாசிரியர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கஜேந்திரகுமார் உரையாற்றுகையிலேயேய இவ்வாறு தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106