ஐசிசியின் கிரிக்கட் குழுவில் மஹேல நியமனம்!
Friday, May 13th, 2016
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஐசிசியின் கிரிக்கட் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் மே 31ம் திகதி மற்றும் ஜூன் 01ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மஹேல ஜயவர்தன முதல் தடவையாக கலந்து கொள்ளவுள்ளார்.
மஹேல ஜயவர்தன 1996ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 1161 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட்டும் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
Related posts:
சிம்பாபே போட்டியில் பங்கேற்றால் தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரில் விளையாடுவது பாதிக்கப்படும் – மேத்ய...
'ரொனால்டோ அபாரம் - ரியல் மாட்ரிட் வெற்றி!
இருபதுக்கு- 20 போட்டியில் அவுஸ்திரேலிய வெற்றி!
|
|
|


