மதவாதத்தையும் தூண்டுவோருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படும் – பிரதமர்!

Friday, July 7th, 2017

நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக முறையில் நடைமுறைப்படுத்துமாறு பொலிசாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சகல இனங்களையும் சேர்ந்த மக்களுக்கு சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என பிரதமர் கூறினார்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் அதிகாரத்திற்கு எதிர்பார்த்துள்ள குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களும் சிறிய விடயங்களையும் இனவாத செயற்பாடுகளாக எடுத்துக் காட்ட முயன்று வருகிறார்கள். இனவாதத்தை தூண்டி அதிகாரத்தை கைப்பற்றுவது அவர்களின் நோக்கமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இது தொடர்பில் சில ஊடகங்கள் செயற்படும் விதம் கவலையளிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இனவாதத்தையும், மதவாதத்தையும் நாட்டில்  தூண்டுவோருக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதில் அளிக்கையில் தீவிரவாத, இனவாத செயற்பாடுகளுக்கு கடந்த அரசாங்கம் அனுசரணை வழங்கியது. இதற்குப் பதிலாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106