அரசியலமைப்பு இறுதிவரைவு தயாரிக்கப்பட்ட பின்னர் விவாதத்துக்கு தயார் – அரசு!

Thursday, July 6th, 2017

புதிய அரசியலமைப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேக தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அரசியலமைப்பு தொடர்பில் மூன்று பீடங்களின் தலைமை மகாநாயக்க தேரர்களின் தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது – அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு காட்சிகள் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளன. அவற்றை வைத்துக்கொண்டே பல்வேறு அமைப்புக்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. எனினும் அரசியலமைப்பின் இறுதி வரைவு இன்னும் தயாரிக்கப்படவில்லை. இறுதி வரைவு தயாரிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் விவாதம் மேற்கொள்ள நாம் தயார். என தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106