குப்பைகளை அகற்றாவிடின் அதிகாரிகளை பதவி நீக்க நடவடிக்கை!
Thursday, July 6th, 2017
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகள் அனைத்தும் மூன்று தினங்களுக்குள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க மாநகர மற்றும் நகர சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த தவறும் பட்சத்தில் பாராளுமன்றஅனுமதி பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் உடனடியாகஅமுலுக்கு வரும் வகையில் அவ்வதிகாரிகள் பதவி நீக்கப்படுவர் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். கொழும்பு நகரத்தில் எழுந்துள்ள குப்பை பிரச்சினைக்கு உடனடி தீர்வினை முன்வைக்கும் நோக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை மேல்மாகாணத்திற்கு பொறுப்பான மாநக ரசபை மற்றும் நகரசபை அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்று கொழும்பு மாநகரசபை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106