தகவல் வழங்கும் போது அச்சம் கொள்ள வேண்டாம்!
Wednesday, July 5th, 2017
தகவல் வழங்கும் போது, அச்சம் கொள்ள வேண்டாம் என, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட திணைக்கள பிராதானிகளிடம் கோரியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் எந்தவொரு விடயம் தொடர்பிலும், உரிய தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், சில திணைக்களங்களில் மக்களால் கோரப்படும் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என, பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, தகவல்களை வழங்குமாறு தமது ஆணைக்குழுவால் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டிய நிலையும் தோன்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்களிலுள்ள தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பொது மக்களுக்கு உரித்துடையது எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், இது குறித்து திணைக்கள பிரதானிகளுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106