பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஜெனரல் கபில வைத்தியரத்ன!
Tuesday, July 4th, 2017
அமைச்சுக்களுக்கான செயலாளர் பதவிகளில் பொறுப்பு மிக்கதும் அதிகாரம் கூடியதுமான பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை பாதுகாப்புச் செயலாளராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கருணாசேன ஹெட்டியராச்சி பதவி விலகியுள்ள நிலையில் அவரது இடத்திற்கு கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்துறையில் பாண்டித்தியம் பெற்ற கபில வைத்தியரத்ன கடந்த 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணியாக பணியாற்றியிருந்தார். அத்தோடு பிஜி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான சுகாதார பரிந்துரைகளை வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்படும் - சுகாதார அமைச்ச...
கையிருப்பிலுள்ள மசகு எண்ணெய் 14 நாட்களுக்கே போதுமானது - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவிப்...
கல்வியிலே சிறந்த மாவட்டமென கூறிக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்போமேயானால் யார் குற்றவா...
|
|
|


