அமைச்சரவை உபகுழு உமா-ஓயா செயற்திட்ட பகுதிக்கு விஜயம்!
Monday, July 3rd, 2017
உமா-ஒயா செயற்றிட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு நாளையதினம் உமாஒய செயற்றிட்ட பகுதிக்கு விசேட மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
இந்த அமைச்சரவை உபகுழுவில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்த அமரவீர மற்றும் விஜித் விஜயமுனி சொஸ்சா ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
சில வீடுகளின் கூரைகளிலிருந்து நீர் கசியும் நிலை குறித்து இந்த உபகுழு விசேட ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்கு மேலதிகமாக இந்த செயற்றிட்டத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளும். வீட்டுக்கூரை மற்றும் கால்வாய்களுக்கு ஊடாக வீடுகளுக்கு நீர் கசியும் நிலை குறித்து வீட்டு உரிமையாளர்களுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றையும் மேற்கொள்வதற்கு அமைச்சரவை உபகுழு திட்டமிட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் அறிக்கைகளை அமைச்சரவை சமர்ப்பிப்பது உபகுழுவின் நோக்கமாகும். இதுவிடயம் குறித்து அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அங்குள்ள மக்களுக்கு அறிவுறுத்தப்படும்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106