போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது!
Saturday, July 1st, 2017
7 இலட்சத்து ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் 5 சந்தேக நபர்களை மத்துகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர்களில் ஒருவர் சட்டக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்துகம விடுதிக்கு நேற்று முன்தினம் வருகை தந்த நபர் ஒருவர் மதுபானத்தை பெற்றுக்கொண்டு அதற்கு 500 ரூபா நாணயத்தாளை வழங்கியுள்ளார். நாணயத்தாள் தொடர்பாக சந்தேகம் கொண்ட விடுதி காசாளர் மத்துகம பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது 12 போலி 5ஆயிரம் நாணயத்தாள்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.பொலிஸார் சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்தியபோது மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடம் 127 போலி 5ஆயிரம் நாணயத்தாள்களும் போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் 38,35,23,22 மற்றும் 24 வயதினைக்கொண்டவர்கள் என்றும் , இவர்கள் மத்துகம மற்றும் பெரளபணாத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106