பிரெக்சிற் தொடர்பில் சிறந்த உடன்படிக்கை எட்டப்படும் – டேவிட் டேவிஸ்!
Tuesday, June 27th, 2017
பிரெக்சிற் தொடர்பில் சிறந்த உடன்படிக்கை ஒன்று எட்டப்படும் என பிரித்தானியாவின் பிரெக்சிற் செயற்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் “சிறந்த பிரெக்சிற் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்படும் என்பது தொடர்பில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். எனினும் அதை 100 சதவீதம் உறுதியாக கூற முடியாது. ஆயினும் சிறந்த முறையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு உடன்படிக்கை ஒன்று எட்டப்படும். அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம்” என தெரிவித்தார்.
பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் பிரெக்சிற்றின் பின்னரும் வசிக்கலாம் எனவும் சுகாதாரம் கல்வி மற்றும் ஏனைய சலுகைகளை அனுபவிக்கலாம் எனவும் அண்மையில் பிரதமர் மே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? நவம்பர் 8 தேர்தல்!
மூன்று தமிழக மீனவர்களுக்க சிறை - இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்ப்பு!
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இன்று !
|
|
|


