இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இன்று !
Monday, April 8th, 2024இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இன்று நிகழ உள்ளது. சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று இரவு 9.13 மணி முதல் நாளை அதிகாலை 2.22 மணி வரை நிகழ உள்ளது.
இதேவேளை, சூரிய கிரகணம் இன்னும் 100 ஆண்டுகள் வரை நிகழாது எனவும் கூறப்படுகிறது. இன்று சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில் நவீன ஆய்வுகளை மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருக்கும்.
இந்த சூரிய கிரகணம் கனடா, அமெரிக்காமுதல் மெக்சிகோ வரை தெரியும் எனவும் நாசா அறிவித்துள்ளது. முந்தைய சூரிய கிரகணங்களை விட இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம் மிக அதிகமாக இருப்பதால், இந்த காலக்கட்டத்தில் பல சோதனைகளை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் சாதாரணமாக காணமுடியாது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது மூன்று ரொக்கெட்டுகளை ஏவ உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ஓஹியோவை தளமாகக் கொண்ட சுமார் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செய்தித்தாளில் இவ்வாண்டிற்கான சூரிய கிரகணம் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த செய்தித்தாளில் ஏப்ரல் 8, 2024 அன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம் பற்றி 1970 ஆம் ஆண்டிலேயே கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் சூரியன், நிலவு மற்றும் பூமி அனைத்தும் நேர் கோட்டில் காட்சியளிக்கும் என்றும் அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106