கிரென்பெல் கட்டட தீ விபத்துக்கு அரசியல்வாதிகளே காரணம்!
Tuesday, June 27th, 2017
கிரென்பெல் கட்டடம் தீப்பிடித்து எரிந்தமைக்கு அரசியல்வாதிகளே காரணம் எனவும் அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் எனவும் பிரித்தானிய அரசியல்வாதி ஜோன் மெக்டொனல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் கிளாஸ்டன்பர்ரி நகரில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அத்துடன் வீடமைப்பு திட்டங்கள் நிதியின் அளவை மாத்திரம் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளமையே அதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த வீடமைப்பு அமைச்சர் ஆலோக் சர்மாஇ “இந்த விடயத்தை அரசியல் சம்மந்தப்பட்ட ஒன்றாக மாற்றுவது கவலைக்குரிய விடயமாகும்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி ஏற்பட்ட குறித்த விபத்தில் சிக்கிஇ சுமார் 79 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த அடுக்குமாடி கட்டடத்தில் பூசப்பட்டிருந்த உலோகப்பூச்சு எளிதில் தீப்பிடித்து எரியக்கூடியதாக காணப்பட்டமையே இந்த தீ விபத்து ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106