கழிவுகளும் பொருளீட்டக் கூடிய சொத்துக்கள்- அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
Tuesday, June 27th, 2017
கழிவு முகாமைத்துவத்தை முறையாக கையாண்டால் கழிவுகளும் பொருளீட்டக் கூடிய சொத்துக்கள் என்று பாரிய மாநகர மற்றம் மேல்மாகான அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றி முறையான கழிவு முகாமைத்துவம் நாட்டுக்கு தேவையை சுட்டிக்காட்டிய அமைச்சர் இது சுற்றாடல் நேயமானதாகவும், பொருளாதார ரீதியில் லாபம் தருவதாகவும் இருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
புத்தளம் அருவாக்கல் பிரதேசத்தில் கழிவு முகாமைத்துவ வசதியை ஏற்படுத்தும் பூர்வாங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிது. சீமெந்து உற்பத்திக்காக சரளை கற்கள் தோண்டப்பட்ட பகுதி பயன்படுத்தப்படும். இதனை தேசிய வள நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பாரிய மாநகர மற்றம் மேல்மாகான அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.
Related posts:
தடுப்பணை அமைத்து விவசாய நிலங்களை பாதுகாருங்கள் : விவசாயிகள் கோரிக்கை!
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அக்கறை - அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவிப்பு!
ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை - போக்குவரத்து அமைச்சர்!
|
|
|


