சுகாதார அமைச்சுக்குள் பிரவேசித்து கலகம் விளைவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது – அமைச்சர் ராஜித்த சேனாரட்ன
Saturday, June 24th, 2017
பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று சுகாதார அமைச்சின் கட்டடத்திற்குள் பிரவேசித்து கலகம் விளைவித்த விதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் செயற்பாடுகளால் சுகாதார அமைச்சின் கட்டடங்கள் சேதமடைந்தன. இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாடு டெங்கு ஆட்கொல்லியை சமாளிப்பதற்காக தத்தளிக்கும் வேளையில், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவது நியாயமானதா என்றும் சுகாதார அமைச்சர் அரச மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பினார்.
Related posts:
இளவயது திருமணம் வீழ்ச்சி - யுனிசெவ்!
பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பலத்த பாதுகாப்பு!
அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாடு ரணிலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் - சாகல தெரிவிப்பு!
|
|
|


