ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத வகையில் பாரிய வீழ்ச்சி!
Thursday, June 22nd, 2017
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி முதன்முறையாக 155 ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய பரிமாற்றம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 155.01 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 151.21 ரூபாவாக பதிவாகி இருந்தது.அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, வரலாற்றில் முதல்முறையாக 155 ரூபாவைத் தாண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.
Related posts:
நலன்புரி நிலைய குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
தடுப்பூசி பெறுவதில் மக்கள் அசமந்தப்போக்கு - சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு!
10 பில்லியன் ஒதுக்கீட்டில் இம்முறை 66,000 மெ.தொ. நெல் கொள்வனவு - அமைச்சரவைக்கும் நிதி அமைச்சு பத்திர...
|
|
|


