போர்த்துக்கல் காட்டுத்தீ: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

Sunday, June 18th, 2017

போர்த்துக்கலில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான காட்டுத்தீ காரணமாக குறைந்தபட்சம் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீதியில் கார்கள் மற்றும் வாகனங்களில் சென்றுகொண்டிருந்த பெருமளவானோர் தப்பியோட முயற்சித்த போதே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 59 பேர் காயமடைந்துள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.வெகுவாக பரவும் காட்டுத்தீயினை கட்டுப்படுத்துவதற்காக 600 தீயணைப்பு வீரர்கள் முயற்சிசெய்து வருகின்ற போதிலும் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ஆறு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் மேலும் இருவரை காணவில்லை என்றும் கூறப்படுகின்றது.தீயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பகுதிகளை தீயணைப்பு வீரர்களால் நெருங்க முடியவில்லை என்றும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106