அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞருக்கு பிணை!
Sunday, June 18th, 2017
பாடசாலை மாணவிகள் சிலரின் முன்னால் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவர், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மீகலேவ காவற்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் செல்ல கலக்கமுவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளவர் மீகலேவ – பதவியகம பிரதேசத்தை சேர்ந்த திருமணமாக இளைஞர் ஒருவர் என தெரியவந்துள்ளது.குறித்த இளைஞர் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் வழக்கு விசாரணையின் போது 2 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இதனுடன் அவரை அரசாங்க மனநல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்று அடுத்த வழக்கு விசாரணையின் போது அறிக்கையொன்றை முன்வைக்குமாறு காவற்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இளைஞர் நீண்ட காலமாக இவ்வாறு மாணவிகள் முன்னால் அநாகரீகமாக நடந்து கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106