விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரக் கூடாது – செல்வம் அடைக்கலநாதன்!
Saturday, June 17th, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர கூடாது என்பதே தமது நிலைப்பாடு என பாராளுமன்ற குழுக்களில் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரனை, அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்தார்இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார்
இதேவேளை, புதிய முதலமைச்சராக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை நியமிக்க கட்சிக்குள் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளதாக தமிழரசு கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சஜந்தன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சித் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவத்தார்
இதனிடையே, வடமாகாண முதலமைச்சராக சீவி விக்னேஸ்வரனே தொடரவேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் நோக்கி சென்றதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106