முதலமைச்சரை மாற்றுவோம் என்கிறார் சயந்தன்!

Saturday, June 17th, 2017

அண்மைய சிலநாள்களாக வடக்கின் பேசுபொருளான வட மாகாண முதலமைச்சரை மாற்றுவது தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், புதிய முதலமைச்சராக சீ.வி.கே.சிவஞானத்தை நியமிப்பதற்கு அதிக பெரும்பான்மை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அடுத்த படியாக பெரும்பான்மை வாக்குகளை சத்தியலிங்கம் பெற்றுள்ளதாகவும் தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பெரும்பான்மையை நிரூபித்து எப்படியும் சீ.வி.கே.சிவஞானத்தை வட மாகாண முதலமைச்சராக்குவது  உறுதி எனவும் தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106