விராட் கோலி படைத்துள்ள சாதனை
Saturday, June 17th, 2017
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்து, இந்திய அணியின் தலைவர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னைய டிவில்லியர்ஸின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார்.செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஸ் அணியை இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசினார். இந்த போட்டியில் 96 ஓட்டங்களை எடுத்த விராட் கோலி 8 ஆயிரம் ஓட்டங்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் அவர் 88 ஓட்டங்களை பெற்ற போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.தனது 175 ஆவது இன்னிங்சில் இந்த இலக்கை கடந்த விராட் கோலி இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 8 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இதற்கு முன்பு தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏ பி டிவில்லியர்ஸ் 182 இன்னிங்சில் இந்த இலக்கை தொட்டதே சாதனையாக இருந்தது. அதை கோலி முறியடித்து இருக்கிறார்இந்திய தரப்பில் சவுரவ் கங்குலி 200 இன்னிங்சிலும், சச்சின் தெண்டுல்கர் 210 இன்னிங்சிலும், தோனி 241 இன்னிங்சிலும் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.28 வயதான விராட் கோலி இதுவரை 27 சதங்கள், 42 அரைசதங்கள் உட்பட 8,008 ஓட்டங்களை பெற்றுள்ளார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106