தொண்டைமானாறு அக்கரைப் பகுதியில் கிளைமோர்
Sunday, June 11th, 2017
யாழ். தொண்டைமானாறு அக்கரைப் பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் பத்துக்கும் அதிகமான கிளைமோர்க் குண்டுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் கூறினர்.
சனிக்கிழமை(10) காலை காணி உரிமையாளரினால் குறித்த பிரதேசத்தில் காணி துப்பரவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட போது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு பத்துமீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் புதைந்த நிலையில் நிலத்தில் கிளைமோர்க் குண்டுகள் தென்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரால் அச்சுவேலிப் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்துக் குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து புதையுண்ட வெடிபொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106