உறவுகளை துண்டிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை – கட்டார்!
Monday, June 5th, 2017
சில அரபு நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என கட்டார் அறிவித்துள்ளது.
சவூதி, ஈஜிப்ட், டுபாய் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கட்டார் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் நியாயமற்றது எனவும் எந்த ஆதாரமும் இல்லாத கூற்றுக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காட்டருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துக்கொள்ளுமாறு சவூதி அரேபியா ஏனைய அரபு நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் தோஹாவுடனான உறவுகளை துண்டிப்பதில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொள்ளுப்பிட்டி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 05 இலட்சம் நிதியுதவி -நடவடிக்கை எடுக்குமாறு ஜனா...
2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் - கல்வ...
அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இளைஞர் ஒருவர் மீது கோடாரி கொத்து!
|
|
|


