போட்டியின் போது திடீர் விபத்து: உயிரிழந்த இலங்கை வீரர்!
Friday, June 2nd, 2017
திடீர் விபத்தில் உயிரிழந்த வாகன ஓட்டப் பந்தய வீரர் ஆனந்த வெடிசிங்கவின் இறுதி கிரிகை குருநாகல் பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.
அதிகமான மக்கள் இவது இறுதி கிரிகையில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நுவரெலியாவில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன ஓட்டப் பந்தயம் ஒன்றின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி அவர் படுகாயமடைந்தார்.இதனை அடுத்து கண்டி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த போதும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.எவ்வாறாயினும் குறித்த போட்டியில் வீரர் ஆனந்த வெடிசிங்கவின் விபத்துக்குள்ளான நிலைமையிலும் போட்டி நிறுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதனிடையே போட்டியின் போது தகுந்த பாதுகாப்புக்களும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Related posts:
இம்முறையும் கனவு தகர்ந்தது!
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மொஹமட் யூசுப் நியமனம்!
2017 ரகர்' தொடர் போட்டியில் இலங்கை அணிக்கு ஐந்தாவது தர கௌரவம்!
|
|
|


