வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
Thursday, June 1st, 2017
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் புதன்கிழமை சந்தேகநபர்கள் பத்து பேரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம்- 14ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிவான் உத்தரவிட்டார்
Related posts:
நெடுந்தீவு படகுச் சேவையின் நேர மாற்றம் குறித்து அறிவிப்பு - புதன்கிழமைமுதல் நடைமுறை!
யானை வேலிகளை பராமரிக்கும் தன்னார்வ படையணியின் திட்டத்தை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்ப...
அஞ்சல் திணைக்களத்தை நவீனமயமாக்க திட்டம் - வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவிப்பு!
|
|
|


