குற்றவாளிகளை கைதுசெய்யவேண்டும் எனக் கோரி மக்கள் போராட்டம்!
Tuesday, May 30th, 2017
மூதூர் மல்லிகைத்தீவு பெரியவெளிக்கிராமத்தில் மூன்று சிறார்களை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைதுசெய்யக்கோரி நேற்றையதினம் மூதூர் மல்லிகைத்தீவு சந்தியில் பாடசாலை மாணவர்கள் பொதுமக்களென திரண்டு மல்லிஙகத்தீவு சந்தியை மறித்து வீதிமறியலில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தால் திருமலை – மட்டக்களப்பு போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது. அத்துடன் போராட்டத்திலீடுபட்டவர்களுடன் கிழக்குமாகாண கல்வியமைச்சர் பேச்சுக்களை நடத்தியும் அவரது முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. பின்னர்பொலிஸாரது மயற்சி காரணமாக பி.ப. இரண்டு மணியளவில் போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. குறித்த மக்கள் போராட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநியான புஸ்பராசா கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106