கிரேக்க முன்னாள் பிரதமர் குண்டுவெடிப்பில் காயம்!

Saturday, May 27th, 2017

கிரேக்க முன்னாள் பிரதமர் லுகாஸ் பாப்படெமோஸ் எதென்ஸில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லுகாஸ் பாப்படெமோஸ் காரினுள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு அடங்கிய பொதி வெடித்து சிதறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மத்திய எதென்ஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 69 வயதான லுகாஸ் பாப்படெமோஸ்  கைகள், கால்கள் மற்றும் வயிற்றுப் பகுதியில் காயமடைந்துள்ளதாகவும் ஆபத்து எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை கார் சாரதியும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்திற்கு எந்தவித தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

கிரேக்கத்தில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த 2011 ஆம் ஆண்டு பாப்படெமோஸ் பிரதமராக பதவியேற்று 2012 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். அதேவேளை ஐரோப்பிய மத்திய வங்கியின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106