சிறுநீரகம் கோரி பணிப்பெண்ணை தடுத்து வைத்தார் சவூதி முதலாளி – இலங்கைத் தூதராக அதிகாரிகளின் நடவடிக்கையால் சிக்கினார்!
Friday, May 26th, 2017
சிறுநீரகங்களை கேட்டு தொழில்தருநரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் றியாத்திலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்டார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தம்புள்ளை கந்தலம பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.டபிள்யூ.இந்தராகாந்தி என்பவரும் அவருடைய தொழில்தருநரும் சவூதி அரேபியாவின் றியாத்திலுள்ள டிறியா பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். றியாத்திலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.பி. இலங்ககோன் இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை நடத்தினார் என்றும் பணியகம் தெரிவித்தது.குறித்த பெண் இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவூதிக்குச் சென்றுள்ளார்.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவருடைய ஒப்பந்தம் முடிவடைந்ததன் பின்னரும் 2 மாதங்களாக வலுக்கட்டாயமாக அவரை தொழில்தருநர் தடுத்து வைத்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய மனைவிக்கு சிறுநீரகமொன்றைத் தானமாக வழங்குமாறு கோரியே தொழில் தருநரால் பணிப்பெண் வற்புறுத்தப்பட்டுள்ளார் என்று அதிகாரிகளால் மேலும் தெரிவிக்கப்பட்டது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106