டிரம்பின் விஜயத்துக்கு பலஸ்தீனில் எதிர்ப்பு!
Thursday, May 25th, 2017
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மத்திய கிழக்கு விஜயத்துக்கு பலஸ்தீனில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் கொடும்பாவியையும் எரித்து மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ட்ரம்ப் தனது சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று(24) பாலஸ்தீனத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விஜயத்தின் போது பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை மேற்கு கரையோர பகுதியில் சந்திக்கவுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இந்த சந்திப்பின்போது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனதிற்கு இடையிலான மோதல் குறித்து கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் ட்ரம்ப், இஸ்ரேலுக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹஜ் போதனையிலிருந்து விலகும் செளதியின் மூத்த மதகுரு: கமேனியின் சாடல் காரணமா?
ட்ரம்ப் - புதின் சந்தித்துப் பேச ஏற்பாடு!
பாக்லான் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளதாக ஐ. நா.சபை ...
|
|
|


