போப் பிரான்சிஸை சந்தித்தார் ட்ரம்ப்!

Thursday, May 25th, 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று போப் பிரான்சிஸை சந்தித்தார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ட்ரம்ப் முதல் பயணமாக சவுதி அரேபியா சென்றார்.பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன பிராந்தியங்களுக்கு பயணம் மேற்கொண்ட அவர் தற்போது ஐரோப்பிய நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

போப் பிரான்சிஸ், ட்ரம்ப் ஆகிய இருவரும் இதற்கு முன் சந்தித்தது இல்லை. இருப்பினும், பருவநிலை மாறுபாடு, குடியேற்ற விதிகள், தடையற்ற முதலாளித்துவம் ஆகிய விவகாரங்களில் ட்ரம்ப் – போப் இடையே நேரடியாகக் கருத்து மோதல் ஏற்பட்டது.

அதேபோல், மரண தண்டனை, ஆயுத வியாபாரம் உள்ளிட்ட விவகாரங்களில் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் காணப்பட்டன. போப்புடனான சந்திப்பிற்கு பிறகு ட்ரம்ப் இத்தாலி அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார். ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டமும் நடத்தியுள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106