திங்களன்று வைத்தியர்கள் முழுநேர பணிப்புறக்கணிப்பு – GMOA
Sunday, May 21st, 2017
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் எதிர்வரும் 22ம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த அரை நாள் பணிப்புறக்கணிப்பு ஒரு நாள் பணிப்புறக்கணிப்பாக அதிகரிப்பதற்கான அதிகாரத்தை அந்த சங்கத்தால் தமது கிளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 19 இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மணவர் ஒன்றியத்தின் சைட்டம் எதிர்ப்பு பேரணியின் மீது காவற்துறை கண்ணீர்ப் புகை தாக்குதல் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் திங்கட் கிழமை, அரை நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீர்வின்றி தொடரும் கொரோனா அச்சுறுத்தல் : ஒரே நாளில் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று !
இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!
இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென் ஆபிரிக்கா உதவும் – அந்நாட்டின் அமைச்சர் நலேடி பண்டோர் உ...
|
|
|
வெளி மாகாணமொன்றில் உயிரிழந்த முதியவரின் உடலை உரிய அனுமதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதால...
பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆபத்து கிடையாது - உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் தெ...
யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 3 ஆவது தடுப்பூசி செலுத்துகை இன்றுமுதல் முன்னெடுப்ப...


