இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!
Sunday, February 5th, 2023
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) உறுப்பினராக டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 3 (1) ஆவது பிரிவின்படி, திறைசேரியின் செயலாளரினால் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கூறிய சட்டத்தின் 6 (4) பிரிவின்படி, 2024 ஜூலை 16 ஆம் திகதி வரை நாணயக்கார குறித்த பதவியை வகிக்க முடியும்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான, பிரதித் தலைவர் உதேனி விக்ரமசிங்க மற்றும் மொஹான் சமரநாயக்க ஆகியோர், கடந்த 3 ஆம் திகதி, நிதி, பொருளாதார உறுதிபடுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு தமது பதவி விலகல் கடிதங்களை வழங்கினர்.
உதேனி விக்ரமசிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை விட்டு விலகிய அதேவேளை, மின்சாரத் துறை ஒழுங்குமுறை அதிகாரியின் பணிமுறை விரும்பத்தகாததாகவும், சகிக்க முடியாததாகவும் மாறியுள்ளதாக தெரிவத்து சமரநாயக்கா விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106