யாழ். குடாநாட்டில் வேலைவாய்ப்புத் தேடும் இளைஞர்,யுவதிகளுக்கு நகர வர்த்தக நிலையங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
Saturday, May 20th, 2017
யாழ். குடாநாட்டில் வேலைவாய்ப்புத் தேடும் இளைஞர்,யுவதிகளுக்கு யாழ்.நகர வர்த்தக நிலையங்களில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு யாழ். வணிகர் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
யாழ் நகர வர்த்தக நிலையங்களில் சிட்டை லிகிதர்கள், பொருட்கள் பொதி செய்பவர்கள், உதவியாளர்கள், சாரதிகள், காசாளர்கள், உதவியாளர்கள்,கணக்குப் பதியுனர், கணனி இயக்குனர்கள், உதவி முகாமையாளர்கள் போன்ற பணிகள் ஆற்றுவதற்கு ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த பணிகளில் சேர விரும்புவோர் யாழ் வணிகர் கழகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு உறுதி செய்யப்படும். இந்தத் தொழில் வாய்ப்புக்களுக்காக ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்
021 222 8593 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென யாழ். வணிகர் கழகம் குறிப்பிட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106