கழிவு முகாமைத்துவம் தொடர்பில் தேசிய கொள்கை  தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Thursday, May 11th, 2017

கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சுக்களுக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் உட்பட அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில்ஜனாதிபதி இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

கழிவு முகாமைத்துவத்தின் போது உள்ளுராட்சி மன்றங்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் உட்பட பல விடயங்கள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றியும், அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் அவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கம் அளித்தார்கள். கழிவு முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுற்றாடல் அமைச்சும், மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் வழங்கவேண்டிய அறிக்கைகளை துரிதமாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106