ஆசிரிய வெற்றிடத்தை நிரப்ப நேர்முகத் தேர்வு !

Thursday, May 11th, 2017

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் உள்ள கணித விஞ்ஞானப் பாடங்களின் ஆசிரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 25ஆம், 26ஆம் திகதிகளில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கூன அசிரியர் வெற்றிடம் தொடர்பான விவரங்கள் திரட்டப்பட்டன. 418 வெற்றிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை நிரப்புவதற்கு அனுமதி மத்திய அரசிடம் கோரப்பட்டது. மத்திய அரசு அனுமதி வழங்கியது. கடந்த பெப்ரவரி மாதம் ஒரு மாத கால அவகாசத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 284 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்தன. வெற்றிடம் அதிகமாகக் காணப்பட்டதால் பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் விண்ணப்பிக்கும் காலத்தை நீடித்தோம்.

விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு மீண்டும் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் மேலம் 68 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மொத்தமாக தற்போது 352 பட்டதாரிகள் விண்ணப்பித்தள்ளனர். எமது மாகாணத்துக்குத் தேவையான எண்ணிக்கையை அடைய 66 விண்ணப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்ற. குறைந்தளவானோர் விண்ணப்பித்தமையால் போட்டிப் பரீட்சையின்றி சேரடியாகவே நேர்முகத் தேர்வு நடத்த எண்ணியுள்ளோம். நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும். என்றார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106