இரவு நேர இரத்த பரிசோதனையில் பரப்பப்படுகிறனவா எய்ட்ஸ் கிருமிகள்!
Tuesday, May 9th, 2017
சுகாதார அதிகாரிகள் இரவு நேரங்களில் வீடுகளுக்கு சென்று யானைக்கால் நோய்க்கான இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும் போது எய்ட்ஸ் நோய்க்கான கிருமிகள் பரவுகிறது என தவறான தகவலை வெளியிடும் சமூக வலைத் தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு புலனாய்வு பிரிவிடம் சுகாதார அமைச்சு புகார் அளிதுள்ளது.
யானைக்கால் நோய் பரிசோதனைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த தவறான பிரசாரம் தொடர்பில் காதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் உத்தரவின் பேரில் கடந்த சனிக்கிழமையன்று சி.ஐ.டி.யில் புகார் அளிக்கப்பட்டதாக அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்
இரத்தச் சலனம் இரவு வேளைகளில் அதிகம் இருப்பதாலேயே இரத்த மாதிரிகளை எடுத்துக் கொள்ள சுகாதார அமைச்சின் யானைக்கால் நோய் எதிர்ப்பு பிரிவினர் இரவு நேரங்களில் வீடுகளுக்கு வருகிறார்கள்.
இந்த அதிகாரிகள் அவர்களின் சீருடைகள் மற்றும் அடையாள அட்டைகளுடநேயே வீடுகளுக்கு செல்கிறார்கள் அவர்களது அடையாளத்தை சரிபார்க்க விரும்பும் எவரும் எப்போதும் அதனை சரிபார்க்க முடியும் எனவும் சுகாதார சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக வலைத் தளங்களின் இந்த தவறான பிரசாரம் தொடர்பில் பொலிஸ் சைபர் கிரைம் பிரிவிக்கும் அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106