வடக்கு கிழக்கை மீள இணைக்க இடமளியோம் – மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் !
Monday, May 8th, 2017
பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று முன்தினம் (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு இருக்கக்கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்” என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அண்மையில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் முஸ்லிம் வாக்குளைப் பெற்று அரசியல் நடத்தும் நல்லாட்சி அரசு முஸ்லிம் சமூகத்திற்கு பெரிய துரோகத்தை இழைத்துள்ளது.
இனி இவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் உரிமை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும், அதிகாரமும் இல்லை. நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். அதனூடாகவே எமது சமூகத்தின் பாதுகாப்பு தங்கியுள்ளது அரசை மாற்றுவதன் ஊடாக மாத்திரம் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. நாங்கள் ஒன்றுபட்டு அதிகாரமுள்ள சமூகமாகச் செயற்பட்டால் மாத்திரமே நாங்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106